புது டில்லியிலிருந்து பயணிகள் வரவில்லை

 

வதந்திகளால் மக்கள் குழப்பம்!

கோலாலம்பூர்–
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து எம்எச் 191 விமானம் பயணிகளை மலேசியாவுக்கு ஏற்றி வந்ததாகவும் அது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியதாகவும் முகமட் ஃபாமி அப்துல்லா என்பவரின் முகநூலில் வெளியான தகவல் குறித்து போலீசார் புலன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஹுஸிர் முகமட் நேற்று தெரிவித்தார்.

இந்தியாவின் உருமாறிய கோவிட்-19 வைரஸ் இந்த நாட்டில் பரவி விடாமல் இருப்பதற்கு இந்தியாவில் இருந்து பயணிகள் மலேசியாவுக்குள் வரவும் மலேசியாவில் இருந்து பயணிகள் இந்தியாவுக்குச் செல்லவும் அரசாங்கம் கடந்த ஏப்ரல் 28ஆம் முதல் தேதி தடை விதித்திருக்கின்றது.

தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், புதுடில்லியில் இருந்து வந்த விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்த முகநூலில் வெளியான   செய்தியில் உண்மை  இல்லை என்று டத்தோ ஹுஸிர் தெரிவித்தார்.

இதுபோன்ற பொய்ச்செய்திகள் மக்களிடையே பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடும் என்று அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here