மனிதவள அமைச்சு தகவல்

 

பணி இட விபத்துகள் குறைந்துள்ளன!

பணி இடங்களில் ஏற்படும் விபத்துகளின் நலனுக்கு முக்கியத்துவம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

புத்ராஜெயா-

பணி இடத்தில் ஏற்படும் விபத்துக்களின் விகிதம் குறைந்துள்ளன என மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஹாஜி அவாங் ஹஷிம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தேசிய பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம்  அளவை உயர்த்துவதற்காக மனிதவள அமைச்சகம் உட்பட தேசிய பணியிடப் பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளுக்கு மனிதவள அமைச்சு , அதன் சார்ந்த பாதுகாப்பு சுகாதார (National Council of Occupational Safety and Health)(NCOSH) அமைப்புகளுக்கு தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கி வருகின்றது.

மேலும் உள்துறை அமைச்சுடன் இணைந்து கூடுதல் ஒத்துழைப்பை வழங்கப்படுவதிலும் முக்கியத்துவம் வழங்குமென்றார்  அவர்.

அதேவேளை அண்ணிய தொழிலாளர்கள் தங்குமிடம் பணியாளர் நலன் சார்ந்த வசதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், கோவிட் – 19 பெருந்தொற்றின் பரவலைத் தடுக்க முதலாளிகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதோடு, முதலாளிகள் தங்களது தொழிலாளர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக  அவர்  தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் மனிதவள அமைச்சு உட்பட தேசிய பணியிடப் பாதுகாப்பு , சுகாதாரம் 2021-2024 ஆம் ஆண்டுக்கான அங்கீகாரத்துவ
நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், பொதுச் சேவை இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ மொஹமட் கைருல் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பணியிட பாதுகாப்புச் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறை  சுகாதார அமைச்சின் டாக்டர் பிரியா ரகுநாத் உள்ளிட்ட சிலருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் நோன்பு துறப்பு அங்கமும் இடம் பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here