கே.எல்.மொத்த சந்தையின் மீன் விற்பனை பிரிவு மே 10 ஆம் தேதி முதல் மூடல்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மொத்த சந்தையின் மீன் விற்பனை பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டிருப்பதால்  மே 10 முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும்.

கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் (டி.பி.கே.எல்) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த மூடல் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரிலும் மொத்த மீன் விற்பனையாளர்களின் ஆதரவும் அளித்திருக்கிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுத்திகரிப்புக்காக சந்தை மூடப்படுகிறது. எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை (மே 9), காய்கறி மற்றும் பழ பிரிவுகளில் உள்ளவர்கள் உட்பட அனைத்து சந்தை தொழிலாளர்களும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்று ஏற்பட்டால், மீதமுள்ள சந்தைகளும் மூடப்படும் என்று செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (மே 7) தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here