2 மில்லியன் பெறுமானமுள்ள சட்டவிரோத சிகரெட்டுகள், மதுபானங்கள் பறிமுதல்

கோலாலம்பூர்: சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் நடந்த ஆறு சோதனைகளில்  2 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள், பட்டாசுகள் மற்றும்  மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய படையணி பொது செயல்பாட்டு படை (ஜிஓஎஃப்) தளபதி மூத்த உதவி ஆணையர் முஹம்மது அப்துல் ஹலீம் ஞாயிற்றுக்கிழமை (மே 9) ஒரு அறிக்கையில், இந்த சோதனைகள் நடந்து வரும் Ops Contraband ஒரு பகுதியாக மே 2 முதல் 8 வரை நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையில் பத்து பஹாட், காஜாங், பாசீர் கூடாங், மூவார், ஸ்கூடாய் மற்றும் ஷா ஆலம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடந்தன. மொத்தம் வயது 33 முதல் 64 வயது வரையிலான எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மிகப்பெரிய சோதனை ஸ்கூடாயில் நடத்தப்பட்டது.

மே 7 ஆம் தேதி ஸ்கூடாயின் தாமான் செலசா ஜெயாவில் நடந்த ஐந்தாவது சோதனையில் கடத்தப்பட்ட சுமார் 913,000  வெள்ளி பெறுமானமுள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 64 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டார். மொத்தத்தில், 2,315,230.50 வெள்ளி தொகை பெறுமானமுள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தகவல்களைப் பகிர்ந்தமைக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் தொடர்ந்து அனைவரையும் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here