கோவிட் எதிரொலி : நாட்டில் 24 மணி நேரத்தில் 22 பேர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: செவ்வாய்க்கிழமை (மே 11) 3,973 புதிய கோவிட் -19 தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,328 தொற்று அதிகம் உள்ள மாநிலமாக  சிலாங்கூரும் சரவாக் (512), கோலாலம்பூர் (483) தொற்று சம்பவங்கள் உள்ளன.

மற்ற மாநிலங்களுக்கான புதிய தொற்றின் எண்ணிக்கை ஜோகூர் (384), கிளந்தான் (321), பினாங்கு (187), கெடா (174), பேராக் (140), நெகிரி செம்பிலான் (126), தெரெங்கானு (93), பகாங் (85), மலாக்கா (79), சபா (50), புத்ராஜெயா (எட்டு), லாபுவான் (மூன்று).

இதனிடையே 2,848 பேர் குணமடைந்து இல்லம் திரும்பி இருக்கின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் மரணடைந்துள்ளனர்.

நடப்பில் 38,499 தொற்று சம்பவங்கள் நாட்டில் இருக்கின்றன. அவர்களில் 453 பேர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 224 பேர் வெண்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here