கோலாலம்பூர் :
சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் இன்று அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
டத்தோ அகமது ஜைதி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றக் குழு, முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரான சையத்தின் மேல்முறையீட்டை அனுமதித்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஏழு ஆண்டு சிறைத்தண்டனை, RM10 மில்லியன் அபராதம் மற்றும் இரண்டு பிரம்படிகளை ரத்து செய்தது.



















