எந்தப் பயனும் இல்லாத ரெம்டெசிவர்

 -WHO தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்

ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நடத்திய சிறப்பு நேர்காணலில், தற்போதைய சூழலில் ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமாரும் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமே தவிர, குணப்படுத்த அல்ல என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

இதேபோல் கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here