அந்நியத் தொழிலாளர்கள் உணவகங்களில் சமைக்கக்கூடாது; சுத்தம் செய்தால் போதும் – சிலாங்கூர் மாநில அரசு

கோலாலம்பூர்:

வெளிநாட்டு ஊழியர்கள் உணவங்களில் சமையல் செய்வோராக இருப்பதை சிலாங்கூர் மாநிலம் தடைசெய்யப் பரிசீலனை செய்துவருகிறது.

சிறிய அளவிலான வர்த்தகங்கள் உள்ளூர்வாசிகளால் மட்டுமே நடத்தப்படுவதை உறுதிச்செய்ய இந்தத் தடை விதிப்பு உதவும். அத்துடன் மலேசிய உணவின் உண்மையான சுவையையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பங்குதாரர்கள் கூறியுள்ளனர்.

“வெளிநாட்டவர் சுத்தம் செய்வதையும் உணவு தயாரிப்பதையும் மட்டும பார்த்துக்கொள்ளும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும்; சமைக்கக்கூடாது,” என்று மலேசிய உணவக சம்மேளனம் மற்றும் சில்லறை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ரோஸ்லி சுலைமான் தெரிவித்தார்.

சமையல் முறையையும் பாரம்பரியத்தையும் தற்காக்கும் கடமை மலேசியர்களையே சாரும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் உள்ளூர் சமையல்காரர் ஒருவரை வேலையில் அமர்த்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரோஸ்லி, ஒரு நாளுக்கு 100 முதல் 120 ரிங்கிட் சம்பளம் வழங்கலாம் என்று பரிந்துரைத்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் உணவகங்களில் முக்கியச் சமையல்காரராக வேலை செய்வதற்கான தடை, ஏற்வெனவே பினாங்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here