மாணவர் ஒருவர் கூட விடுபடக்கூடாது

 

கோலாலம்பூர்-
கற்றல் சித்தாந்தம் என்பது ஓர் அறையில் நான்கு சுவர்களுக்கு உட்பட்டதாக மட்டும் இருந்துவிடக்கூடாது. மாறாக புதிய வழமைக்கு ஏற்ப எந்த இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்புடையதாகவும் பொருத்தமாகவும் இருக்குமாறு மாற்றத்திற்குத் தயாராக இருக்க வேண்டுமென்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.

கல்வி ஆற்றலில் எந்தவொரு மாணவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்குக் கற்பித்தல் கற்றல் களத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரதம் மனவோட்டங்களையும் கருத்துகளையும் கல்வி அமைச்சு தொடர்ந்து செவிமடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் ஓராண்டுக்கு முன் நாட்டை ஆட்கொண்டது. அது முதல் கற்பித்தல் கற்றல் இயங்கலை (ஆன்லைன்) மூலமே பெரும்பாலும் நடத்தப்பட்டு வருகிறது.

இது ஆசிரியர்கள் பல்வேறு டிஜிட்டல் கல்வி செயலிகளில் நிபுணத்துவமும் ஆற்றலும் பெறுவதற்கு வழிவகுத்தது. இது புதிய வழமை கற்றலுக்குப் புதுப்பாதை அமைத்தது என்று அவர் கூறினார்.

இந்த மாற்றங்களானது, வெறும் நான்கு சுவர்களுக்குள் மட்டும் கல்வி கற்றல் இல்லை. அதற்கு அப்பாலும் அப்பணி தொடரும் என்பதற்குச் சான்றாக புதிய வழமையில் மெய்நிகர் சேவை விரைந்து அந்த வெற்றிடத்தை நிரப்பியது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

இயங்கலை வழமை கற்பித்தல் கற்றல் பணிகளை நிறைவேற்றுவதில் குறிப்பாக வீட்டில் இருந்தவாறு கற்பித்தல் ஆற்றல் சேவைகளை அமல்படுத்துவதில் ஆசிரியர்கள் பல்வேறு சவால்களை ஆசிரியர்கள் எதிர்கொண்டாலும் எந்தவொரு மாணவரும் இதில் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இந்தப் புத்தாக்கச் சிந்தனைகளுக்கும் முயற்சிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக டான்ஸ்ரீ முஹிடின் குறிப்பிட்டார்.

இறிவார்ந்த ஆசிரியம் புதிய தலைமுறையின் ஆக்கம் என்ற கருப்பொருளில் பொன்விழா (50 ஆண்டுகள்) ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்வியமைச்சின் ஃபேஸ்புக் பக்கம், ஆர்டிஎம் டிவி1, டிடிக் டிவி பிபிஎம் , இதர ஒளிபரப்பு நிலையங்கள் வழி நேரலையாக ஆற்றிய உரையில் பிரதமர் ஆசிரியர்களுக்கு தம்முடைய வாழ்த்துகளைப் பதிவுசெய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here