ஈப்போ:
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேற்றிரவு 89 குடும்பங்களை சேர்ந்த 312 பேராக இருந்த நிலையில், இன்று காலை 90 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேராக அதிகரித்தது.
கெரியான் மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக, பேராக் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.




















