ஏரிக்குள் புதைந்த கிராமத்தின் கதை

 70 ஆண்டுகளுக்குப்பின் வெளிச்சம் !

70 ஆண்டுகளாக வெளியே வராத ரகசியத்தை பருவகாலம் காட்டிக்கொடுத்தது.

இத்தாலியில் 1950ஆம் ஆண்டு ஏரிக்குள் காணாமல் போன கிராமம் ஒன்று பருவ மாற்றத்தினால் நீர்மட்டம் குறைந்துவிட்டது. தற்போது அக்கிராமத்தின் அடையாளம் வெளியே தெரிகிறது.

ரெஷியோ என்ற ஏரி அருகே குரோன் என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. அந்தக்காலத்தில் ஏரிக்கரையோரம் மக்கள் குடியேறுவது வழக்கம். தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயம் பார்த்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வர்.

இந்நிலையில் ஏரியில் 1950ஆம் ஆண்டு நீர் மின் நிலையத்தை உருவாக்கும் போது வெள்ளம் ஏற்பட்டது. அப்போது குரோன் கிராமம் நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக கிராமம் நீரில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது ஏரியின் நீர் மட்டம் குறைந்த பிறகு கிராமம் இருந்ததற்கான சுவடுகள் தெரிகின்றன.

70 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஏரிகளை இணைக்க முற்பட்டபோது வெள்ளம் ஏற்பட்டு குரோன் கிராமம் நீருக்குள் மூழ்கியது. எனவே 160க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இடம்பெயர்ந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் தற்போது வெளியே தெரியும் தொலைந்த கிராமத்தின் சுவர்கள், படிகள் மற்றும் பாதாள அறைகள் போன்றவற்றின் படங்களை சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

குரோனின் வரலாற்றை மையமாக வைத்து “குரோன்” என்ற தலைப்பில் 2020- இல் ஒரு தொடரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here