அதிகமாக ஆவி பிடித்தால் கருப்பு பூஞ்சை நோய் வருமா?

கொரோனா நோயாளிகள் மத்தியில் கருப்பு, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை ஆகிய நோய்கள் பரவி வருவது மருத்துவ உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

அதிகப்படியாக நீராவி சிகிச்சை எடுத்துக் கொள்வது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பெங்களூரை சேர்ந்த பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் தீபக் ஹல்திப்பூர்.

அளவிற்கு அதிகமாக நீராவி பிடிப்பதால், மூக்கின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. கருப்பு பூஞ்சை (mucormycosis) நோய்க்கிருமி காற்றில் பரவி இருக்கிறது. இதை நமது மூக்கு தடுத்துக் கொள்ளும். ஆனால், நீராவி பிடிப்பதன் மூலமாக அந்த தடுப்பு திறன் குறைகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.

மேலும் தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here