அமெரிக்க தடுப்பூசிகளால் பக்கவிளைவுகளாம்!

 இந்தியா திண்டாடலாம்  –

ஆய்வில் அதிர்ச்சித்தகவல் !

தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று  ஒரு பக்கம் பாட்டாய்ப் பாடிக்கொண்டிருக்கும்போது  அமெரிக்க தடுப்பூசிகளால் பக்க விளைவு என்றால் இதற்கு என்ன தான் அர்த்தம்.
இருக்கு- ஆனால் இல்லேன்னு நகைச்சுவை பேசுவதுபோல் இச்செய்தி இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களுக்கு இன்னும் அச்சம் தீரவே இல்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?
இப்படி ஏதாவதொன்று முளைத்துக்கொண்டே இருந்தால் தடுப்பூசி 10 விழுக்காட்டைத் தாண்டாது. 70 விழுக்காடு என்பது வெறும் கனவாகவே போய்விடும். 
பக்க விளைவு என்றால் அதற்கும் வழி இருக்கத்தானே செய்யும்?
அமெரிக்காவின் பைஸர்,  மாடர்னா தடுப்புசிகள் செலுத்திக் கொண்ட மையோகார்டிடிஸ் என்ற இதய தசை அழற்சி ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

விரைவில் அமெரிக்க நிறுவனங்களான பைஸர்,  மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்பவர்களில் பெரும்பாலும் ஆண்களுக்கு இதய தசை அழற்சியான மையோகார்டிடிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுகிறது. இந்த பக்கவிளைவுகள் சரிபடுத்தக் கூடியவைதான் எனவும்  சொல்ல்ப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இந்த பக்கவிளவுகளை எதிர்கொள்ள இந்தியா தடுமாறலாம் என சொல்லப்படுகிறது.

முடியும் ஆனால் முடியாது என்பதல்ல பேச்சு. முடியும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here