தொடர் சிகிச்சைக்குப் பணமில்லை

பொதுமக்களின் உதவியை நாடுகிறார்!

தெலுக் இந்தான்-

எண். 72 ஈ, தாமான் இந்தான் பாரு, லோரோங் லீமா, ஜாலான் கம்போங் பஞ்சார், தெலுக் இந்தான் எனும் முகவரியில் வசிக்கும் பரமேஸ்வரி த/பெ கணபதி (30 வயது) என்ற பெண்மணி கடந்த 6 வருடங்களாக கடுமையான நீரிழிவு நோயினால் பெரும் அவதியுற்று வருகிறார்.

இவரின் தந்தை ம. கணபதியும், தாய் சு. பகவதியம்மாளும் பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். தாய் தந்தை இருவரும் இறந்தபின் தன் அண்ணன் க.மாறனின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார் பரமேஸ்வரி.

என்னுடைய 23 ஆவது வயதிலேயே எனக்கு நீழிரிவு நோய் ஏற்பட்டு விட்டது. நீரிழிவு நோய் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் என்னால் சரியாக வேலைக்கு கூடச் செல்ல முடியாத சூழ்நிலை.

கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது சூடான குளம்பு என்னுடைய இடது காலில் தெளித்து விட்டதால், காலில் புண் ஏற்பட்டது. மருந்தகத்திலிருந்து மருந்து வாங்கிக் பயன்படுத்தியும் எந்தவொரு பலனும் இல்லை. சிறிதளவில் இருந்த புண் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே சென்றது.

சிகிச்சை மேற்கொள்வதற்காக அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு என் காலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக எனக்கு சிகிச்சை அளித்து மருந்து வழங்கினர்.

இருப்பினும் என் காலில் ஏற்பட்ட புண் குணமாகவில்லை. மாறாக
கால் பாதத்தின் மேல் புறம் ஏற்பட்ட புண் அடி பாதம் வரை பெரியதாகி கால் பாதத்தில் துவாரத்தை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமின்றி என் காலின் சுண்டு முழுவதும் விரல் கருப்பு நிறமாகி விட்டது.

நான் மிகவும் பயந்து விட்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மீண்டும் என் காலை பரிசோதித்த மருத்துவர்கள் என்னுடைய இடது கால் பாதத்தை அகற்றியாக வேண்டும் எனக் கூறி விட்டனர்.

அதைக் கேட்ட என்னால் நிம்மதியாக உறங்கவும் முடியவில்லை, உண்ணவும் முடியவில்லை. இந்த சிறு வயதிலேயே எனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டதை எண்ணி மிகவும் வருந்தினேன் என்றார் பரமேஸ்வரி.

இருப்பினும் என் அண்ணன் மாறன் எனக்கு ஆறுதல் கூறி என்னைத் தைரியப்படுத்தினார். என்னைத் தெலுக் இந்தானில் உள்ள ஒரு தனியார் கிளினிக் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு என் காலை சோதனை செய்த அம்மருத்துவர், காலை அகற்ற தேவையில்லை, சரிசெய்து விடலாம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனால் காலில் உள்ள புண் குணமாகும் வரை தொடர்ந்து சிக்கிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

ஒரு நாளைக்கு மூன்று முறை புண்ணை சுத்தம் செய்து (ஈணூஞுண்ண்டிணஞ்) மருந்து போட வேண்டும். ஒரு முறை சிகிச்சை ட்ரெஸ்ஸிங் செய்வதற்கு 42 வெள்ளி செலுத்தியாக வேண்டும். ஒரு நாளில் மூன்று முறை இதுபோல் சிகிச்சைக்கு 126 செலுத்தியாக வேண்டும்.

சில தினங்களாக அவரிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன். என் காலில் ஏற்பட்ட புண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி கொண்டு வருகிறது. என்னால் மாற்றத்தை நன்கு காண முடிகிறது. ஆனால் தொடர் சிகிச்சைக்கு என் கையில் பணம் இல்லை.

சிலாங்கூர் மாநிலத்தில் வேலைச் செய்துக் கொண்டிருந்த என் அண்ணனும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக வேலையை இழந்து தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். ஆங்காங்கே கிடைக்கும் சிறிய சிறிய வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

நாங்கள் தங்கியிருப்பதோ வாடகை வீட்டில். அண்ணனுக்கும் மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவரும் அவரின் குடும்பத்தைக் கவனித்தாக வேண்டும். இத்தனை நாட்களாக அண்ணன் தான் என் சிகிச்சைக்கு பணம் செலுத்தி வந்தார். தற்போது வேலையின்மையினால் அவரும் பல இன்னல்களுக்கிடையிலும் போராட்டங்களுக்கிடையிலும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத்தில் வேலைச் செய்துக் கொண்டிருந்த என் அண்ணனும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக வேலையை இழந்து தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். ஆங்காங்கே கிடைக்கும் சிறிய சிறிய வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

நாங்கள் தங்கியிருப்பதோ வாடகை வீட்டில். அண்ணனுக்கும் மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவரும் அவரின் குடும்பத்தைக் கவனித்தாக வேண்டும். இத்தனை நாட்களாக அண்ணன் தான் என் சிகிச்சைக்கு பணம் செலுத்தி வந்தார். தற்போது வேலையின்மையினால் அவரும் பல இன்னல்களுக்கிடையிலும் போராட்டங்களுக்கிடையிலும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

என் காலை அகற்றாமல் காப்பாற்றியாக வேண்டுமென்றால் நான் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால் என் கையில் பணமில்லை. பொதுமக்கள் தான் எனக்கு உதவ முன் வரவேண்டும். என்னையும் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக் கொண்டு தயவுசெய்து எனக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று பரமேஸ்வரி பொதுமக்களிடம்  கண்ணீர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பரமேஸ்வரிக்கு உதவ  எண்ணம் கொண்டவர்கள் 011-69718550 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு உதவ முன் வரலாம்.

செய்தி-டில்லிராணி முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here