-மனைவியும் விபத்தில் மரணம்
அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா , அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவர்.
அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா, ‘வெயிட் டவுன் மினிஸ்ட்ரீஸ்’ என்ற உடல் எடை குறைப்பு தொடர்பான பயிற்சிக் குழுவின் தலைவர் ஆவார். 1986 இல் அந்த குழுவை நிறுவினார். பின்னர் 1999 iல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவினார்.
கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்தை நிர்வகித்து வந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.