சகலகலா வசதிகளுடன் வாலிபர் உருவாக்கிய ரகசிய குகை…

6 வருட முயற்சிபலர் ஆச்சரியம் !

சில சமயங்களில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்று தெரியாமல் போய்விடுகிறது. அதனால் விபரீதங்கள் தலைதூக்கும்போதுதான் தலையில் அடித்துகொளவதும் உண்டு. 

பெற்றோர்களுக்குத் தெரியாமல் தங்கள் நடவடிக்கைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் பிள்ளைகள் மகா திறமைசாலிகளா? அல்லது புத்திசாலிகளா?

பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போடும் ஸ்பெயின் இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளைஞர், சிறுவயதில் இருந்தே இவருக்கும் இவரின் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இது எல்லா குடும்பங்களில் நடைபெறும் சாதாரமாண விஷயம் தான். ஆனால் இதற்கு அந்த சிறுவன் செய்த செயல்தான் அவரின் பெற்றோரையே வியக்க வைத்துள்ளது.

பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் உடனே வீட்டில் இருக்க கூடாது என தோன்றும், ஆனால், நமக்கு போக இடம் இருக்காது. ஆனால் இந்த ஸ்பெயின் இளைஞரோ தங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு குகையையே உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து கூறும் அவர், ‘சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் என் பெற்றோர்கள் ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனக் கூறினர். அப்போது எங்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3 மீட்டர் ஆழத்தில் குகை ஒன்றை தோண்டினேன்.

சுமார் 6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய என்னுடைய குகை தற்போது கழிவறை, வைஃபை, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் உருவாக்கியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார் அந்த இளைஞர்.

இவரின் இந்த செயல் அவரின் பெற்றோர்கள், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்படியானால் சிறுவனின் பெற்றோர் ஏதும் தெரியாமலா இருந்தார்கள் ! என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here