மலேசியா வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

கோலாலம்பூர்:

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று மாலை மணி 6.30 மணிக்கு மலேசியா வந்தடைந்தார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காம்பெலக்ஸ் பூங்கா ராயா பகுதியை வந்தடைந்த அவருக்கு, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணை பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஜாகிட் ஹமிடி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

அரசு முறை பயணமாக மலேசிய வந்துள்ள ஜி ஜின்பிங், இன்று தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை இரு நாட்கள் மலேசியாவில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

சீன அதிபரின் இந்தப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் உறவுகளுக்கு இது ஒரு சான்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here