அனைத்துலக போட்டிகளில் பங்கேற்கும் மலேசிய வீரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை அழைத்துச் செல்ல அனுமதியில்லை

புத்ராஜெயா: வெளிநாடுகளில் நடைபெறும் அனைத்துலக போட்டிகளில் பங்கேற்கும் மலேசிய விளையாட்டு வீரர்கள், தங்கள் துணைவர்களை அவர்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மலேசிய குடிவரவுத்துறை கூறியுள்ளது.

ஒரு போட்டியில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்முறை குழுவினர் மட்டுமே விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்” என்று (ஜூன் 3) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக போட்டிகள் மற்றும் நிகழ்வுகளுக்காக நாட்டை விட்டு வெளியேறும் விளையாட்டு வீரர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் போன்ற கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து ஆதரவு கடிதங்களைப் பெற வேண்டும் என்றும் வெளிநாட்டில் வசித்து வரும் மலேசிய விளையாட்டு வீரர்களுக்கு வாழ்க்கைத் துணைவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கோவிட் -19 தொற்றுநோயின் போது இயக்கம் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், நாட்டை விட்டு வெளியேற மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை தாம் அறிவோம் என்றும் ஆனால் மை ட்ராவெல்பாஸ் வழியாக நாட்டை விட்டு வெளி யேறுவதற்கான அனுமதி தவறாக பயன்படுத்தியதை தங்கள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அதன் காரணமாகவே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here