இந்தியப் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமை

– துருக்கி அரசு  அறிவிப்பு

இந்தியா உட்பட சில நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருவதால் இந்திய பயணிகளுக்கு பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துருக்கியிலும் இந்திய பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. துருக்கியில் ஏற்கனவே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுது துருக்கி விமான துறை கொரோனா கட்டுப்டுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், பிரேசில், தென்னாப்ரிக்கா நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அந்த 8 நாடுகளைத் தவிர பிற நாட்டினர் துருக்கிக்கு வருவதாக இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 14 நாட்களுக்கு முன்பதாகவே வரலாம்.

அவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமாகி இருந்தாலும் அவர்கள் துருக்கிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here