சிங்கப்பூரில் ஆபாச படங்களை பகிரும் டெலிக்கிராம் தளத்தின் நிர்வாகிக்கு சிறைக்கு பதில் மனநல மருத்துவம்

சிங்கப்பூர்: டெலிகிராம் தளத்தில் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் “எஸ்ஜி நாசி லெமாக்(Sg Nasi Lemak) உரையாடல் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான லெனர்ட் டியோ மின் சுவான், 27, சிறைக்குப் போவதற்கு பதிலாக மனநல மருத்துவ உதவியைப் பெறுவார் என்று சிங்கப்பூர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஒரு கால கட்டத்தில் 44,000 உறுப்பினர்களைக் கொண்ட அந்த குழுவில் ஆபாச படங்கள் , வீடியோக்கள் மற்றும் ஆபசமான உரையாடல்கள் பகிர்ந்துகொண்டது தொடர்பில் சட்டப்படி நான்கு ஆடவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

மேலும் இக் குழு கடந்த நவம்பர் மாதம் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டு, 29 பேருக்கு நிர்வகிக்கும் தகுதியும் வழங்கப்பட்டது. அத்தோடு இக் குழுவில் நீடிப்பதற்கு உறுப்பினர்கள் ஆபாச படம் அல்லது வீடியொவை பதிவேற்றம் அல்லது பகிர வேண்டும் என்றும் நிர்வாகிகளில் ஒருவரான டியோ கூறியிருந்ததாக நம்பப்படுகிறது.

2019 மார்ச்(15) க்கும் அக்டோபர் (3) க்கும் இடையே போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற 31 முறைப்பாடுகளுக்கு எதிராக நான்கு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் டியோவும் ஒருவராவார்.

டியோவினது வினோதமான நடத்தைக்கு காரணம் அவர் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சிறைக்கு பதில் டியோவிற்கு மனவுள மருத்துவ சிகிச்சை வழங்குமாறு டியோவின் சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கமைய
நீதிமன்றம் சிறைக்கு பதில் அவருக்கு மனநல மருத்துவ சிகிச்சைக்கு வழங்குமாறு கட்டளையிட்டுள்ளது.

மேலும் ஆபாசமன விடயங்களை அனுப்புதல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய ஒவ்வொரு குற்றங்களுக்காக டியோவிற்கு 3 மாதங்கள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here