பிரிட்டனில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டுகொள்ள அனுமதி

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 12 – 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, அமெரிக்காவின் ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி செலுத்த, அந்நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து இதன் தலைமை நிர்வாகி ஜூன் ரெய்னி கூறியதாவது; ஏற்கனெவே சிறுவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை தரவுகளின் முடிவுகளை கவனமாக கண்காணித்ததில், 12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு, பைசர் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் சிறப்பாக செயல்படுகிறது என உறுதியானது.

இதையடுத்து பிரிட்டனில் இந்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், 12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here