விரட்டுகிறது அடுத்த ஆபத்து; தடுப்பூசி போட்டவர்களையும் விரட்டும் தொற்று

லண்டன்: இன்னொரு பிரச்சனை கிளம்பியிருக்கு. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு புதுமாதிரியான அறிகுறிகள் தென்படுகிறதாம். அந்த குறிகள் என்னவென்று, விஞ்ஞானிகள் இப்போது தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா தொற்றினால் உலகமே பீடித்துள்ளது. இது என்ன மாதிரியான வைரஸ் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அறிகுறிகளும் இவைகள்தான் என்று திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. புது புது ஆய்வுகள், புது புது அறிகுறிகள் தினம் தினம் வெளியாகி கொண்டிருப்பதால், இந்த பீதியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை.

தடுப்பூசி மருந்து இல்லாவிட்டாலும், ஒரே நம்பிக்கை தடுப்பூசிதான்.. அதனால்தான் உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்க, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன. இதற்காகவே பல நாடுகளில் மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உற்பத்தியையும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகின்றன. இப்போது இதிலும் பிரச்சனைகள் முளைத்து வருகிறது.

ஆராய்ச்சி முதல் மற்றும் 2வது டோஸ் போட்ட பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்… இந்தியாவிலும்கூட அதுபோல உள்ளவர்கள் பாதித்துள்ளனர். இதை பற்றின ஆராய்ச்சியைதான் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்தினார்கள்.

அந்த ஆய்வுல் பல ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. அறிகுறிகள் அதன்படி, 11 லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தி உள்ளனர்.. முதல் டோஸ் போட்டவர்கள் 0.2%, 2வது டோஸ் போட்ட 0.3% பேர் தொற்றால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.. முன்பெல்லாம் அதாவது இந்த தொற்று பரவ ஆரம்பித்தபோது, இருமல், சளி, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்றவைகளைதான் அறிகுறிகளாக சொன்னார்கள். இப்போது இந்த அறிகுறிகள் கூட இல்லாமல் தொற்று வருவது என்பது வேறு விஷயம்.

தும்மல் ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவது என்பதுதான் பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது.. அதுவும் 4 வகையான அறிகுறிகள் இதில் தென்படுமாம். முதலில் தும்மல். தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் 24% மக்களுக்கு தும்மல் அறிகுறியால் பாதித்துள்ளனர்.

அடுத்ததாக மூச்சுத் திணறல். இதுதான் ரொம்ப பயங்கரமானது.. தொற்று பாதித்தவர்கள் மட்டுமில்லாமல் தடுப்பூசி போட்ட மக்களும் மூச்சு திணறலால் பாதிக்கப்படுகின்றனர்… வீக்கம் மூன்றாவதாக, காதில் இரைச்சல்.. ஏதாவது காதில் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால், அந்த இரைச்சலும் கொரோனா அறிகுறிதானாம்.. நான்காவதாக, வீக்கம்.. இந்த வீக்கம் கழுத்திலும் அக்குள் பகுதிகளிலும் ஏற்படுகிறது.

இது 2 நாளில் அதுவாகவே போய்விடுமாம். ஒருவேளை தொடர்ந்து இருந்தால், அது கண்டிப்பாக தொற்று அறிகுறிதான் என்கிறார்கள். அறிகுறி தொற்றுவில் இருந்து தப்பிக்க தடுப்பூசிதான் தீர்வு என்றார்கள். தடுப்பூசியிலும் தொற்று என்றால் என்ன செய்றது? இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் நம்மை ஆட்டுவிக்க போகிறதோ தெரியவில்லை..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here