அயராத போராட்டம் -அகம் மகழும் வெற்றி- கரம் கொடுத்தோர்க்கு நன்றி!

உங்கள் கேள்வியும் ஓசை பதிலும்

-உண்மை வாசகன் . கிள்ளான்

கேள்வி: கிள்ளான் செட்டி பாடாங் விவகார தொடர் முயற்சிக்கு பலன் கிடைதிருக்கிறதே!

நகராண்மைக் கழக இந்திய பிரதிநிதிகள் பெருமிதம். இப்படித்தான் கூறவேண்டும்.

கிள்ளான் நகராண்மைக் கழக இந்திய உறுப்பினர்கள் இடைவிடாது மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் தொடர்பில் சர்ச்சைக்குரிய கிள்ளான் செட்டி பாடாங் பெயர் மாற்ற விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 டத்தாரான் மஜ்லிஸ் பெர்பண்டாரான் கிளாங் என்ற பெயர் தங்களுக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்ததாக  குறிப்பிட்ட அவர்கள் இது குறித்து நகராண்மைக் கழக நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசாமல் மாதாந்திரக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதில் தங்களுக்கு ஏம்மாற்றமாக அமைந்த நிலையில் அனைத்து இந்திய பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக நளன் முனியாண்டி, ஆதி சரவணன், புஸ்பவள்ளி மகாலிங்கம், மதுரைவீரன், டெனிஸ் ராஜா, மா.மகேந்திரன், பிரபு முனுசாமி ஆகியோர்  மக்கள் ஓசையிடம் தெரிவித்தனர்.

   இவ்விவகாரம் குறித்து கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அமாட் ஃபட்சிலியை சந்தித்து தங்களின் அதிருப்த்தியை தெரிவித்ததுடன் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட செட்டி பாடாங் என்ற பெயரை மாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டனர். இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பலர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். சிலர்  தங்களை மிக ஏளனமாகவும் பேசினர். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது நாங்கள் எங்கள் கடமையை அமைதியாக தொடர்ந்தோம்.

   எங்களுக்கு துணையாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களான சார்லஸ் சந்தியாகோ, டாக்டர் குணராஜ், டோனி லியோங், அஸ்மிஸாம் ஆகியோர் தோள் கொடுத்தனர். நகராண்மைக் கழக உறுப்பினர்களில் பலரும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

   நாங்கள் கொண்டு சென்ற கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த டாக்டர் அமாட் ஃபட்சிலி, இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காண்பதாக உறுதிக் கூறினார். அதன்படி நேற்று மாலை அனைத்து இந்திய நகராண்மைக் கழக இந்தியப் பிரதிநிதிகளை சந்தித்தபோது சில இடையூறுகள், கருத்து வேறுபாடுகள், வாக்கு வாதங்கள்  தொடர்ந்தாலும் இறுதியில் நமக்கு சாதகமான பதிலை கொடுத்ததில் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என குறிப்பிட்டனர்.

பொறுமையுடன் உள்ளூர போராட்டம் நடத்தினோம். சில அதிகாரிகள் ஒத்துழைப்புக் கொடுத்து இந்த பெயர் மாற்றத்தை மாற்றுவதற்கு துணைப்புரிந்தனர்.

 விரைவில் பொறுத்தப்படவிருக்கும் புதிய பெயர் பலகை இந்திய சமுதாயத்தின் அடையாளத்தை கொண்டிருக்கும் என குறிப்பிட்ட அவர்கள், இதற்கு ஒப்புதல் வழங்கிய கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவருக்கும் குரல் கொடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அரசுசாரா இயக்கங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டனர்.

பி.ஆர்.ஜெயசீலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here