வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு புதிய அப்டேட்

மக்கள் மத்தியில் தகவல் தொடர்பு சேவைக்காக அதிக அளவில் பயன்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலி தற்போது தங்களது பயனர்கள் பயனடையும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த தகவல் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

வாட்ஸ் ஆப்:

நாட்டில் மிக அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலி தான் வாட்ஸ் ஆப். இந்த செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போதைய ஊரடங்கு காலத்தில் சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே தற்போது அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ் ஆப் செயலி மிக அதிக அளவில் பயன்பாடு வருகிறது.

மேலும் அவ்வப்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனர்கள் பயனடையும் வகையில் பல அப்டேட் குறித்த அறிவிப்பினை வெளியிட்டு வரும். தற்போது அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் பயனர்கள் வாய்ஸ் மெசேஜ் பிறருக்கு அனுப்புவதற்கு முன்பு அதனை ஒரு முறை பிரிவியூ செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அப்டேட் Android 2.21.12.7 என்னும் வெர்சனுக்கு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் மற்றொரு அப்டேட் ஆக பயனர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜினை வேகமாக கேட்கும் வசதியையும் வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி வாய்ஸ் மெசேஜ் 1x, 1.5x மற்றும் 2x என்ற வேகத்தில் கேட்டுக்கொள்ளலாம் என்றும் அவ்வாறு கேட்கும் பொழுது வாய்ஸ் மெசேஜ் தெளிவாக கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த அப்டேட் விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here