கலிபோர்னியா: பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும்.
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியாகி இயல்பு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ராஜகுடும்பத்தில் நிற வெறி மற்றும் பாகுபாடு காரணமாக இவர்கள் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.