பாலி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு RM46 பயண வரி

இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 150,000 ரூப்பியா (46 மலேசிய ரிங்கிட் ) பயண வரி செலுத்த வேண்டும்.

பாலியின் கலாசாரத்தைக் காக்க அந்த வரி விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பயண வரி 2024ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

பாலித் தீவின் பொருளியலுக்குப் பலமாக பயணத்துறை உள்ளது. ஆண்டிற்குப் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பாலி ஈர்க்கிறது.

வரிப் பணம் மின்னிலக்க முறையில் வசூலிக்கப்படும் என்றும் பயணிகள் பாலிக்குள் நுழைவதற்கு முன்னர் பணம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இந்தோனீசியாவின் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு புது வரி பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நலிவடைந்துள்ள பாலியின் சுற்றுலாத்துறை தற்போது முழுவீச்சில் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here