கனடாவில் பரவி வரும் மர்ம மூளை நோய்

48 பேர் வரை பாதிப்பு?

கனடா:

மர்ம மூளை நோய் பரவல்… கனடாவில் பரவிவரும் மர்ம மூளை நோய் ஒன்றால் இதுவரை 48 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அச்சம் பரவிவருகிறது.


ஏற்கனவே கனடா கொரோனாவை எதிர்கொண்டு போராடி வரும் நிலையில், தற்போது மர்ம மூளை நோய் ஒன்று பரவிவருவதால் மக்கள் திகிலடைந்துள்ளனர். இதுவரை இந்த மர்ம நோயால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்குத் தூக்கமின்மை, கைகால்கள் சரியாக இயங்காமை , இல்லாதவை இருப்பது போல் தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கனவில் இறந்தவர்களைக் காண்கிறார்களாம். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


எதனால் இந்த மர்ம நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிவதற்காக கனடிய மருத்துவர்கள் இரவும், பகலும் பாடுபட்டு வருகிறார்கள். சில மருத்துவர்கள், இந்த நோய் செல்போன் டவர்கள் மூலம் பரவுவதாகவும், சிலர் கொரோனா தடுப்பூசிகள்தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால், அவர்களது கூற்றை நிரூபிக்க அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here