சிறுவன் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை

..  தாய்  கைது.!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியை சார்ந்த பெண்மணி சமந்தா மோரேனோ ரோட்ரிக்ஸ் (Samantha Moreno Rodriguez). இவரது வயது 35. இவரது கணவரின் பெயர் ரோட்ரிக்ஸ் (Rodriguez). இந்த தம்பதிகளுக்கு லியாம் ஹஸ்டட் (Liam Husted) என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சிறுவன் மாயமாகியிருந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், மே 28 ஆம் தேதி சிறுவனின் உடலை நெவேடா (Nevada) பகுதியில் சடலமாக மீட்டனர்.

ஆனால், சிறுவனின் உடலில் அடையாளங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு இருந்ததால், சிறுவன் யார்? என்ற விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் தொழில்நுட்பம் மூலமாக சிறுவனின் முகத்தை சித்தரித்து செய்தி ஊடகங்களில் வெளியிட்டனர்.

இதனையடுத்து, சிறுவன் மந்தா மோரேனோ ரோட்ரிக்ஸ் – ரோட்ரிக்ஸ் தம்பதியின் மகன் லியாம் என்பது உறுதியானது. விசாரணையில் முதலில் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், சிறுவனின் தாயார் தனது மகனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here