சொன்னது 60 – கூடுதலாக பறிபோனது 200

ஏடிஎம் மோசடி  – பெரியவர் ஏமாந்தார்!

கோலாலம்பூர்-
ஏடிஎம் எனப்படும் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் ஆடவரிடம் பணம் எடுக்க உதவி கோரியபோது அவ்வாடவர் தன் வங்கிக் கணக்கில் இருந்து 200 வெள்ளியைத் எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம் வீராசாமி என்பவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

தேவைக்கான பணத்தை சேமிப்பிலிருந்து  எடுக்க தலைநகர் ஜாலான் புடு மே வங்கிக்குச்  சென்றபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத ஆடவரிடம் உதவி கோரினார்.

ஏடிஎம்மில் இருந்து பணத்தை மீட்க பன மீட்பு கார்டைக் கொடுத்து 60 வெள்ளியை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த ஆடவர் கூடுதலாக 200 வெள்ளியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். வங்கி புத்தகத்தை அங்கிருந்த வங்கிப் பணியாளரிடம் கொடுத்து பரிசோதிக்கக் கொடுத்தபோது அதில் 260 வெள்ளி எடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

உடனே 60 வெள்ளி மட்டுமே எடுத்தேன். மீதி 200 வெள்ளி எங்கே என்று கேட்டபோது, அந்த வங்கி அதிகாரிகள் என்னை போலீசில் புகார் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர் என்றார் அவர்.

அதன்பின்  ஜாலான் பண்டாரில் உள்ள போலீஸ் நிலையம் சென்று புகார் செய்ததாக சுப்பிரமணியம் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here