சீன விஞ்ஞானியின் கொரோனாவுக்கு முந்தைய செயல்!

.. பின்னர் நடந்த சம்பவம் காட்டியது!

2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பரவ தொடங்கிய போதே, சீனா தான் அந்த வைரஸை உருவாக்கியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.. ஆனால் சீனா அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது..

இந்நிலையில் கொரோனாவை சீனா கையாண்ட விதம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா தொற்றுநோய் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஒரு சீன இராணுவ விஞ்ஞானி கோவிட் தடுப்பூசிக்கான காப்புரிமையை தாக்கல் செய்ததாகவும், சில வாரங்களுக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்ததாகவும் வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை இராணுவத்தில் பணியாற்றிய யூசென் ஷோ, கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி சீன அரசியல் கட்சி சார்பாக ஆவணங்களை தாக்கல் செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்டின் முதல் பாதிப்பு 2019 டிசம்பரில் வுஹானில் தெரிவிக்கப்பட்டது.. ஆனால் உலக சுகாதார அமைப்பு 2020 மார்ச் 11 வரை ஒரு தொற்றுநோயாக அறிவிக்கவில்லை.

கோவிட் தொற்று மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக சீனா முதன்முதலில் ஒப்புக்கொண்ட சில நாட்களிலேயே தடுப்பூசி காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது ஒரு தொற்றுநோய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தடுப்பூசி காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி ஆஸ்திரேலியன் என்ற நாளிதழில் வெளியான செய்தியில் ” யூசென் ஷோ வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி விஞ்ஞானிகளுடன் நெருக்கமாக பணியாற்றினார். ஆனால் தடுப்பூசிக்கான காப்புரிமையை தாக்கல் செய்த மூன்று மாதங்களுக்குள் யூசென் ஷோ மர்மமான முறையில் இறந்தார்.

தி நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு மே மாதம் யூசென் ஷோ மரணம் ஒரு சீன ஊடக அறிக்கையில் மட்டுமே பதிவாகியுள்ளது, அவர் நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தபோதிலும் இதுகுறித்த செய்தி வேறு எந்த ஊடகத்திலும் பதிவாகவில்லை.

சீன ராணுவத்தில் பணியாற்றுவதற்கு முன்பு, ஷோ அமெரிக்காவுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தார் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் முதுகலை ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்த சூழலில் அமெரிக்காவின் ஜோ பிடனின் அரசு மேற்கொள்ளும் கொரோனாவின் தோற்றம் குறித்த புதிய விசாரணையில் ஷோவின் மர்மமான மரணம் ஆராயப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம், அமெரிக்க உளவுத்துறை கொரோன தொற்றின் தோற்றத்தை கண்டுபிடித்து 90 நாட்களுக்குள் அதுகுறித்து தன்னிட புகாரளிக்க தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கும்” என்று பிடென் கூறியிருந்தார்..

வைரஸ் ஒரு விலங்கின் மூலம் மனிதர்களுக்கு பரவியதா அல்லது வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளியிடப்பட்டதா என்று அமெரிக்க உளவுத்துறை விசாரிக்க உள்ளது.

ஒரு ஆய்வக கசிவு காரணமாக தொற்றுநோய் ஏற்பட்டது என்ற கோட்பாடு சமீபத்திய வாரங்களில் அதிகமாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. முக்கியமான விஞ்ஞான சான்றுகள் இல்லாததால், கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, பின்னர் உலகம் முழுவதும் பரவியது என்பதை சரியாக அறிந்து கொள்வது சாத்தியமில்லை என்பதை நிரூபிக்கக்கூடும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

Also Read : 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களையும் இந்த வகை கொரோனா தாக்கும்; எய்ம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here