சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய திராட்சைப் பழங்களுக்குள் கிடந்த செத்த எலிக்குட்டி!!

ஆஸ்திரேலியா: ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விதையில்லாத சிவப்பு திராட்சைப் பழங்களை வாங்கிய பெண், அதற்குள் இறந்த நிலையில் கிடந்த எலிக்குட்டியை கண்டு திகிலடைந்தார்.

எம்மா என்ற பெண் சூப்பர் மார்க்கெட்டில் தான் வாங்கிவந்த திராட்சைப் பழங்களை தனது இரவு உணவுக்காக சுத்தம் செய்த போது, அதனுள் இறந்த எலிக்குட்டியை பார்த்து அதிர்ந்து போனார்.

“உண்மையிலேயே நான் மிகவும் பசியோடிருந்தேன் .இதை பார்த்த பின் நான் பசியையே முற்றாக மறந்து விட்டேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவினைப் பார்த்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டும் கொண்டதுடன், இச் சம்பவம் தொடர்பாக தாம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியது.

மேலும் அச் சூப்பர் மார்க்கெட்டில் ( fresh and free ) உத்தரவாதம் இருப்பதை சுட்டிக்காட்டி, நீங்கள் திருப்திப்படவில்லை என்றால் வாங்கிய பொருளின் பற்றுச்சீட்டை அல்லது வாங்கிய பொருளை விலை விவரப் பையை (packaging) வாடிக்கையாளர் சேவையில் கொடுத்து, அப்பொருளுக்குரிய பணத்தினை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்லலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here