கோவிட்-19 இரண்டாவது அலையில் 719 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர்; இந்தியாவில் துயரம்

புதுடில்லி: கோவிட் தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகி கடுமையாக போராடி வருகின்றனர்.

இதில், பிகாரில் அதிகபட்சமாக 111 மருத்துவர்களும், டில்லியில் 109 மருத்துவர்களும், உ.பி.,யில் 79, மேற்கு வங்கத்தில் 63, ராஜஸ்தானில் 43, ஜார்கண்ட் மற்றும் காஷ்மீரில் 39, ஆந்திராவில் 35, தெலங்கானாவில் 36, குஜராத்தில் 37, ஒடிசாவில் 28, மகாராஷ்டிராவில் 23, தமிழகத்தில் 21, மத்திய பிரதேசத்தில் 16, அசாம் 8, கர்நாடகாவில் 9, கேரளாவில் 24, மணிப்பூர், சத்தீஸ்கரில் தலா 5, ஹரியானா, பஞ்சாபில் தலா 3 பேர், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பாண்டிச்சேரி 1 ஒருவர் என 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் சங்கம் அதில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் இறப்பு பதிவை மட்டும் வைத்தே இந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here