39 மனைவிகள், 89 குழந்தைகள்; உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

39 மனைவிகள், 89 குழந்தைகள் கொண்ட, உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் காலமானார். உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உடல் நலக் குறைவால் காலமானார். மிசோரம் தலைநகர் அய்ஸ்வல் ஆகும்.

வட கிழக்கு மாநிலமான மிசோரமின், பக்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சானா.  76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 89 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் உடல் நலக் குறைவால் காலமாகி விட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஜோரம் தங்கா தெரிவித்துள்ளார்.

ஜியோனா சனாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம் குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here