அமெரிக்காவில் காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்.

அமெரிக்கா (ஜூன் 15) : அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு விளம்பரங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இருந்தும் அங்கு தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில்பாதிக்கும் குறைவானவர்களே இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் தடுப்பூசி செலுத்தாமையால் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இருக்கையில், அமெரிக்கர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றுக்கு 6 லட்சம் பேரை நாம் இழந்து இருக்கிறோம் என்றும் கொரோனா வைரசை வீழ்த்த நாம் இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது அத்தோடு கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு கவசத்தை கைவிடுவதற்கான தருணம் இதுவல்ல” என்றும் தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here