சரவாக் கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்டவரும் கலை கலாச்சாரத் துறை அமைச்சர் நான்சி சுக்ரியின் தாயார் காலமானார்

பெட்டாலிங் ஜெயா: சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சரும் பாடாங் சாடோங் நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி சுக்ரியின் தாயார் நேற்று இரவு 11.54 மணிக்கு பாத்தாங் சாடோங் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் இயற்கை எய்தினார். பிபி மேக்பெர்சன் @  மெக்பெர்சன் 90, முதுமைக் காரணமாக என்று ஆஸ்ட்ரோ அவானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா சர் வைனர் ப்ரூக்கின் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த கபிட் குடியிருப்பாளரான ஜான் ஆண்ட்ரூ மெக்பெர்சன் தம்பதியினருக்கு இரண்டு உடன்பிறப்புகளின் முதல் குழந்தையான   மெக்பெர்சன் 1930ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். அவரது தாயார் சுவா எங் டோக் இபான் சீன மொழியைச் சேர்ந்தவர்.

கூச்சிங்கின் கம்போங் பாங்லிமா செமன் லாமாவில் வளர்ந்த இவர் பின்னர் 1948 ஆம் ஆண்டில் சுக்ரி மஹிடியின் கம்போங் சாந்துபோங்கைச் சேர்ந்த மலாய் ஆசிரியர் மெலனாஸை மணந்தார். இவருக்கு மொத்தம் 10 பிள்ளைகள்.  நான்சி அதில் 10ஆவது குழந்தையாக இருந்தார்.

பிபி தனது வாழ்நாள் முழுவதும், சரவாக் மகளிர் சங்கங்களின் கூட்டமைப்பு (பிபிடபிள்யூஎஸ்) மூலம் கிராமப்புறங்களில் பெண்களின் மேம்பாட்டுக்கு பங்களிப்பாகவும் இருந்ததோடு அரசியலிலும்  தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here