மனிதவள அமைச்சர் – கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் பாசார் போரோங்கில் அதிரடி சோதனை

தி. மோகன்,கோலாலம்பூர் (ஜூன் 17) :ஓரிரு நாட்களுக்கு முன்னதாக கோலாலம்பூர் பாசார் போரோங்கில் வேலை செய்யும் நபர்களுக்கு இடையில் தகராறு நிகழ்ந்ததாக காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இப்பகுதியில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கூட்டரசுப் பிரதேச துணையமைச்ங்ர் டத்தோஸ்ரீ சந்தாரா உள்ளிட்டோர் நேரடியாகக் களமிறங்கி பார்வையிட்டனர்.

மனிதவள அமைச்சு ஆள் பல இலாகாவின் வாயிலாக நாடு தழுவிய அளவில் இன்னும் அமலாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை மொத்தமாக 19,517 முதலாளித் தரப்பிடம் இச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களிடத்தில் 1990 தொழிலாளர் வீடமைப்பு, தங்குமிடம், வசதிகளுக்கான குறைந்தபட்ச தரச்சட்டத்தின் (சட்டப் பிரிவு 446) கீழ் 747 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.

அந்த 747 விசாரணை அறிக்கைகளுள் 125 விசாரணை அறிக்கைகள் குறித்து நாடு தழுவிய அளவில் உள்ள ஙெ்ஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றச்சாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இது தவிர 305 விசாரணை அறிக்கைகளுக்கு அபராதம் அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக சட்டப்பிரிவு 446 அடிப் படையில் தவறுகள் புரிந்த முதலாளித் தரப்பினருக்கு மொத்தமாக 3,323,000 வெள்ளி மதிப்பில் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் மட்டும் இது தொடர்பில் 64 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 20 விசாரணை அறிக்கைகள் குறித்து குற்றச்சாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டுள்ள நிலையில் 3 விவகாரங்கள் 70 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான அபராதத்துடன் சரி செய்யப்பட்டுள்ளன.

 இதற்கிடையே 27 விசாரணை அறிக்கைகளுக்கும் அபராதம் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை கோலாலம்பூர் ஆள்பல இலாகா வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் விவகாரம் குறித்து 214 புகார்களைப் பெற்றுள்ளது என அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here