காய்கறிகள் வகைதானே பூ வியாபாரம்

அனுமதி மறுப்பு ஏன்?

ஆலயங்களுக்கு அருகே உள்ள பூக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணனின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது என சிரம்பான் பூக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் எஸ்ஓபி-யை முழுமையாக பயன்படுத்திதான் பூ வியாபாரம் செய்கிறோம். இங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாகவும், குடும்பமாகவும் வருவது கிடையாது. தனி ஆளாக ஒருவராக வந்து பூக்களை அல்லது பூ மாலையை வாங்கி செல்கிறார்கள்.

பூக்கடையில் கோவிட்-19 தொற்று பரவியதாக இதுவலையில் எந்தவொரு பதிவும் இல்லை, அப்படி இருக்கையில், ஏன் சிரம்பான் பசார் பெசாரில் பூக்கடைகள் திறக்க அனுமதிக்கக்கூடாது. விவசாயம் சார்ந்த பூக்கடையை தவிர்த்து காய்கறிகள், பழவகைகள் போன்ற வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் வேளையில், அத்துறையை சார்ந்த பூக்கடைகளுக்கும்  அனுமதி வழங்கப்பட வேண்டும் .

இதனிடையே நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதனை தொடர்ப்புக்கொண்டு இவ்விவகாரம் குறித்து கேட்டபோது, பூக்கடைகள் திறப்பதற்கு தேசிய பாதுகாப்பு மன்றத்திடமிருந்து எந்தவோர் அனுமதியும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

மாநில பாதுகாப்பு மன்றம் அதற்கான எந்தவோர்  அறிவிப்பையும் செய்வதற்கு அனுமதிக்கவில்லை இருந்தபோதும் இதற்கான பரிந்துரை ஒன்றை ஏற்கனவே தாம் மாநில மந்திரி பெசார் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதைக்  குறிப்பிட்டார்.

-நாகேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here