சீனாவில் 28 மணி 45 நிமிடத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக்கட்டடம்

சீனா (ஜூன் 19) : சீனாவின் சாங்ஷா நகரில் 10 மாடிக் கட்டடத்தை பிரோட்  குரூப் ( Broad Group) நிறுவனம் 28 மணி 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தக் கட்டடத்தைக் கட்டும் கிட்டத்தட்ட 4 நிமிட வீடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் எந்த மாயமோ மந்திரமோ இல்லை. மிக எளிதாக கட்டுமான யுக்தியை கையாண்டு, சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகள் , சமையல் கூடங்கள் , கதவுகள் என்பவற்றை தனித்தனியாக உருவாக்கி, கட்டுமானப்பணி தொடங்கியதும் அவற்றை ஒன்றன் அருகே ஒன்றாக வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி, ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானத்தை முழுமையாக முடித்தது.

 

பின்னர் அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்தக் கட்டடம் பூகம்பத்தை எதிர்க்கும் வல்லமைக் கொண்டது என்றும் விரும்பினால் கட்டடத்தினை அப்படியே தூக்கிச் சென்று வேறு இடத்தில் வைக்கவும் முடியும் என்கிறது இக்கட்டடத்தின் கட்டுமானக் குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here