உலக அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பப் போட்டி தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை!

ராமேஸ்வரி ராஜா- மக்கள் ஓசை செய்தியாளர், தாப்பா, (ஜூன் 23) :

இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம் (Mica,IYSA (Indonesia Young Scientist Association), Jakarta Global University) இயங்கலை வாயிலாக 2021-ஆம் ஆண்டு உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டியை நடத்தியது. இதில், தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கத்தை வென்று தமிழ்ப்பள்ளிக்கு நற்பெயரை ஈட்டித் தந்துள்ளனர்.

இப்போட்டியின் இறுதிச் சுற்றில் மொத்தம் 21 நாடுகளைச் சேர்ந்த 288 குழுக்கள் கல்ந்து கொண்டன. கடுமையான போட்டிக்கு மத்தியில் தாப்பா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இச்சாதனை பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது என பள்ளி தலைமையாசிரியர் வனஜா அண்ணாமலை கூறினார்.

இந்தோனேசியா ஏற்று நடத்திய அனைத்துலக புத்தாக்கப் போட்டியான இதில் தாப்பா தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் முதல் முறையாகக் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.மூலிகைப் பொருள்கள் கொண்டு சுயமாக சவர்க்காரம் (HOMEMADE BEET CLASS ROOT GLOWING GLOW SOAP) உருவாக்கி  திவாதினி துரைசாமி, ஜெயலட்சுமி ஜெயபிரகாஷ் ஆகிய இரண்டு மாணவிகளும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த காயத்ரி கிருஷ்ணன், யமுனா தேவி மணியம் ஆகிய ஆசிரியைகளும் குழுவாக செயல்பட்டு இச்சாதனையைப் படைத்துள்ளனர்.

இல்லிருப்புக் கல்வியை மேற்கொண்டு வருகின்ற போதிலும் உருமாற்றுப் பள்ளியாகவும் அதன் எடுத்துக்காட்டுப் பள்ளியாகவும் தாப்பா தமிழ்ப்பள்ளி பல்வேறு நிலைகளில் சாதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல இப்போட்டியில் கலந்துகொள்ள முழு முயற்சிகளை மேற்கொண்ட மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் பாராட்டினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here