தலையில் இருப்பது முள் கிரீடமாயிற்றே! எப்படி சிரிப்பு வரும்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகத்தில் ஏன் புன் சிரிப்பு இல்லை என்பதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சரின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்றத்தில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்னும் ஒருவார காலத்திற்குள் கொரோனா முற்றிலும் இல்லாத தமிழ்நாடு என்கிற நிலை வரும் எனவும் அவர் கூறினார். திமுக அரசு பொறுப்பேற்ற போது கொரோனா பாதிப்பு நாள் ஒன்றிற்கு 36,184 ஆக இருந்ததாகவும், பொறுப்பேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார் .
தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என நம்பிக்கை தெரிவித்த அவர் , விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார் .
முதலமைச்சரை சந்திக்க வருபவர்கள் அவரிடம் எப்போதும் இருந்த கதாநாயக புன் சிரிப்பு , பொறுப்பேற்ற பிறகு ஏன் இல்லை ? என கேட்பதாக தெரிவித்தார் .
அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த உச்சத்தில் இருக்கும்போது எப்படி சந்தோசமாக இருக்க முடியும் எனவும் , தான் ஏற்றிருப்பது மலர் கிரீடம் இல்லை , முள் கிரீடம் என கூறுவதாக தெரிவித்தார் .