கமிஷனரின் உதவியாளராக தூய்மை பணியாளர்

வாய்மையே வெல்லும்!
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாநகராட்சி புதிய கமிஷனராக விஷ்ணு சந்திரன் தூய்மை பணியாளர் கோவிந்தராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோரை முகாம் அலுவலக உதவியாளராகவும் அலுவலக உதவியாளர் மகேசை, டபேதாரராகவும் நியமித்துள்ளார்.
இதில், கோவிந்தராஜன், மகேஷ் ஆகியோர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.இதுகுறித்து தூய்மை பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், ” அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் காலம் காலமாக குப்பை சேகரித்தாலும் கவுன்சிலர், துணை மேயர், மேயர் ஆனுதில்லை.
பதவிகளை விரும்பியதும் இல்லை. தற்போதைய நியமனங்கள் மகிழ்ச்சியை தருகிறது”. என்றனர். திருநெல்வேலி 1994 இல் மாநகராட்சியாக மாறியது. மொத்தமுள்ள 55 வார்டுகளில் பேட்டை மானகாவலம்பிள்ளை நகர் டவுன் தெற்கு மவுண்ட் ரோடு உள்பட 5 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் கணிசமாக இருந்தாலும், ஒருவர் கூட கவுன்சிலரானது இல்லை.
பதவி உயர்விலும் அலுவலக உதவியாளர் நிலைக்கு மட்டுமே உயர்ந்தவர்கள் தற்போதைய பணியமர்த்தலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here