திரும்பும் கனவில் மூதாட்டி

விரும்பும் படிப்பில் டாக்டர்!  

நிறையப் பேருக்கு வயது என்பது வெறும் எண்ணாக இருக்கும் சிலருக்கு இருப்பதில்லை. ஆண்டுகள் கூடக்கூட முதுமையை எண்ணி முயற்சியை விட்டு விடுகின்றனர். இவர்களிலும் மாறுபட்டவர்களே முதுமையை ஒதுக்கிவிட்டு முடியும் என்ற வாகனத்தில் பயணம் செய்கின்றனர்.   ஆனால், குஜராத்தைச் சேர்ந்த மூதாட்டி உஷா லோதயா தன்னுடைய 67 வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த உஷாவுக்கு 12 வயதிலேயே மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவருடைய 16 வயதில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. படிக்க விரும்பிக் கல்லுாரியில் பிஎஸ்சி சேர்ந்திருந்த அவருக்கு 20 வயதில் திருமணம் நடந்தது. அதனால் கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார்

இது குறித்து உஷா லோதயா  கூறும்போது, ‘திருமணத்துக்குப் பின் குடும்பத்தை கவனித்ததால் படிக்க முடியவில்லை. பொறுப்புகள் குறைந்தபிறகு மீண்டும் கல்வியைத் தொடர விரும்பி 9 ஆண்டுகளுக்கு முன் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன். என்னுடைய குருவும் ஜெயின் அறிஞருமான ஜெயதர்ஷிதாஸ்ரீஜி மகராஜ் மூலம் ஈர்க்கப்பட்டு, ஆன்லைனிலேயே மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரியில் ஜெயின் மதத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றேன். அதிலேயே முதுகலைப் பட்டமும் பெற்றேன் என்கிறார்.

 

 50 ஆண்டுகளுக்கு முன்னதாகப் படித்து மருத்துவர் ஆகி, பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டத்தைப் பெற ஆசைப்பட்டேன்.

தற்போது முனைவர் பட்டம் பெற்று, என் கனவை நிறைவேற்றி உள்ளேன். வருங்காலத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன்” என்று உஷா லோதயா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here