அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி:

  அமெரிக்க விஞ்ஞானிகள் பரிசோதனை!

அனைத்து வகையான கொரோனா வைரஸ்களையும் குணப்படுத்தும் வகையிலான தடுப்பூக்கான சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலக அளவில் பலநாடுகளில் கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்ட பல்வேறு விதமாக மாறி மக்களை தாக்குகிறது. 

இந்தியாவிலும் கூட டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரஸ் சில நோயாளிகளுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த உருமாற்றம் மிக கவலையளிக்க கூடியது என்று அரசு தெரிவித்துள்ளது.

நம்முடைய பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டதா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

டெல்டா பிளஸ் கொரோனா வைரசை தடுப்பூசிகளால் எதிர்க்க முடியாது என்று சில தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுவதை நம்மால் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது ஒரு புதிய, கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். இது கொரோனாவின், அனைத்து வகைகளையும் வேரறுக்கும்.

அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி எதிர்காலத்தில் புதிதாக பெருந்தொற்று உலகில் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here