உலகம் தவறு செய்கிறது

கொரோனா நடவடிக்கை குறித்து – WHO தலைவர் கவலை

பாரபட்சம்  என்பது நாட்டின் வளப்பத்தில் இருக்கலாம். ஆனால் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் அப்படி இருப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்கிறார் WHO தலைவர்.

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள்,  சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்கனவே பரவலாகி இருக்கிறது. ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போய்ச் சேரவில்லை.

இந்நிலை தொடருமானால் கொரோனா தொற்றிலிருந்து  மீள்வது வெகு சிரமத்திற்குள்ளாக்கிவிடும். இதில் உலக நாடுகள் ஒன்றித்து செயல்பட்டால்தான் விரைவான தீர்வுக்கு வழி பிறக்கும்.  

1980- இல் எச்ஐவி, எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவற்றை உலக நாடுகள் இப்போது செய்கின்றன என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எழ்மை நாடுகளுக்கு பாரபட்சமின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை அவர்  விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here