கடுமையாக விமர்சிக்கிறார் ட்ரம்ப்

பைடன் நிர்வாகம் சரியில்லையாம்!

அமெரிக்காவின் ஒஹிகோவில் நடைபெற்ற பேரணியில் அதிபர் பைடனின் நிர்வாகம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக பேரணியில் கலந்து கொண்டார். 

ஒஹிகோவில் நடைபெற்ற இந்த பேரணியில் பேசிய டொனல்ட் ட்ரம்ப், 2020 தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறினார்.

மேலும், குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதகரித்து வருவதாக கூறிய ட்ரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக ஜோ பைடன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப் குற்றச்சாட்டில் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனாலும் இப்போதைக்கு இது போதும் என்று சாம்பிள் காட்டியிருக்கிறார். 

விடுவாரா பைடன்! பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கா அஞ்சப்போகிறது. பாம்பின் கால் பாம்பு அறியாதா என்ன! அடுத்த பொதுத்தேர்தல் வரைக்கும் தம்மீது குறை சொல்வதே ட்ரம்பின் வேலையாக இருக்கப்போகிறது என்பது தெரிந்த செய்திதானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here