20,000 ஆண்ககளுக்கு முன்பே கொரோனாவின் குத்தாட்டம் !

 ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தற்கால நோய்கள் அனைத்தும் அக்காலம் தொட்டே இருந்திருக்கிறது என்பதற்கு ஆய்வுகள் சான்றுகள் கூறுகின்றன . 
காலத்திற்கு ஏற்ப அவைற்றின் வளர்ச்சிப் பரிணாமங்கள்  மாறுபட்டிருக்கின்றன. அதனால் பெயர்களும் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன.
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் அதன் தாக்கமே தற்போது இருப்பதாகவும் கரண்ட் பயாலஜி என்ற ஆய்விதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது 

இந்த கட்டுரையில் தற்போதைய சீனா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து குயின்ஸ்லாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தபோது கொரோனா மரபணுக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் கரண்ட் பயாலஜி இதழில் கூறப்பட்டிருப்பது உண்மைதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here