இந்தோனேசியா:
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம், சிடோர்ஜோ பகுதியில் அமைந்திருந்த ஒரு இஸ்லாமியப் பள்ளி கட்டிடம் செப்டம்பர் 29 ஆம் தேதி இடிந்து விழுந்தது.
தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் (BNPB) தெரிவித்ததாவது, இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், சிலர் காணாமல் போயுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடும் 38 பேரைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று பேச்சாளர் அப்துல் முகாரி கூறினார்.
தேசிய தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் (Basarnas) தலைவர் முகமது சியாஃபி குறிப்பிட்டதாவது, மொத்தம் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிருடன் மீட்கப்பட்ட 99 பேரும், உயிரிழந்த மூவரும் அடங்குவர்.
சம்பவத்தன்று பிற்பகல் தொழுகைக்காக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அக்கட்டிடத்தில் கூடியிருந்ததாகவும், பல மாடிகளைக் கொண்ட கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததாகவும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் ‘அந்தாரா’ வெளியிட்டுள்ளது.



















