மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் காலமானார்; பிரபலங்கள் இரங்கல்.

இந்தியா , ( ஜூன் 30):

சிம்புவின் மன்மதன் திரைப்பட நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கெளஷல் மாரடைப்புக் காரணமாக காலமானார்.

இவர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகை மந்திராவின் கணவரின் மரண செய்தியை இயக்குநர் ஓனிர் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இந்த துக்க செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை மந்திரா பேடியின் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here