ஐ.நா.,வில் இந்தியாவின் எச்சரிக்கை

ஆயுதங்கள் தாங்கியட்ரோன் ஆபத்தானது !

நியூயார்க்: ‘
ட்ரோன்கள் சிறப்பானவை. ஆனாலும் தீயவர்களுக்கு ட்ரோன்கள் சட்டவிரோத  கருவியாக விளங்கப்போகிறது என்பதை உணரவேண்டிய நேரம் வந்துவிட்டது. 
ட்ரோன்கள் பயன்பாடு சுலபமானதாகவும் முக்கியமானதாகவும்  இருக்கலாம். ஆனால், நன்மையைவிட தீமையே அதிகம் என்பதையும் உணர வேண்டும்.
ட்ரோன்கள் பெருத்த தீமைக்கு கொண்டுபோய்விடும் என்பதற்கு தகுந்த நடவடிக்கை இப்போதே மேற்கொள்ளப்பட வேண்டும். இதைத்தான் இந்தியா உணர்த்தியிருக்கிறது. 
உலக நாடுகள் உறங்கிவிடக்கூடாது. அதற்கான கட்டுப்பாடுகளை இப்போதே திட்டமிடவேண்டும் . இல்லையேல் புதிய  தலைவலிக்கு மருந்து தயாரிக்க வேண்டி வந்துவிடும்
ஆயுதங்கள் தாங்கிய, ‘ட்ரோன்’களைப்  பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., சபை தலைமையகத்தில், ‘பயங்கரவாதத்தால் உலகம் சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்பு செயலர் வி.எஸ்.கே.கமுடி கூறியதாவது:
நவீன தொழில்நுட்பங்கள் இப்போது பல தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சமூக வலைதளங்கள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் பயங்கரவாதிகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. ‘வீடியோ கேம்’ ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த விவகாரத்தில் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை புறக்கணிக்க வேண்டும். கொரோனா பரவலால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதத்தை, ‘வீடியோ கேம்’ வழியாக, பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றனர்.

இது எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிடும். பயங்கரவாதம், ஒரு நாட்டுக்கான பிரச்னையல்ல. உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது.வலியுறுத்தல்இந்தியாவில் ஜம்மு விமானப்படை தளத்தில் ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து தான் செயல்பட்டுள்ளனர் என, சொல்ல தேவையில்லை.பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பொய் சொல்கிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாக்., உதவுகிறது. அதனால் பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here