கொரோனாவை துல்லியமாக கண்டறியும் மாஸ்க்!

ஓர் அசத்தல் கண்டுபிடிப்பு !

கொரோனா பாதிப்பை 90 நிமிடங்களில் கண்டறிய பிரத்யேகமாக மாஸ்க் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பொதுவாக ஆர்டிபிசிஆர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதாவது மூக்கில் சளி மற்றும் வாயில் உமிழ் நீரை எடுத்து கொரோனா கண்டறியப்படுகிறது. அப்படியும் தொற்று தெரியாமல் ஆனால் அறிகுறி இருப்பவர்களுக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா முதல் அலையின் போது ரேபிட் டெஸ்ட் கிட் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தெரியவந்ததை அடுத்து ரேபிட் டெஸ்ட் கிட் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் சுவாசம் மூலமாக கொரோனாவை கண்டறிய மாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அணிந்துக்கொண்டால், தொற்று பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை சுவாசம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த கொரோனா பரிசோதனை முறையை, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மாஸ்க்கில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அது சுவாசத்தை பரிசோதிக்கத் தொடங்கும். அந்த மாஸ்க்கை, ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால் மொபைலிலேயே ரிசல்ட்டை பார்த்துக்கொள்ளலாம்.

ஆர்.டி.பி.சி.ஆர். போல அதிக துல்லியமான முடிவை இதுவும் வழங்கும் என்று இந்த மாஸ்க்கை கண்டுபிடித்த விஞ்ஞானி பீட்டர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here